சர்வதேச விருது பெற்ற ‘மை சன் இஸ் கே’ படம் மூலம் அறியப்பட்ட சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார், சவுண்ட் பார்ட்டி ஸ்டூடியோஸ், தி டிரீம் கிளப் நிறுவனங்களுடன் இணைந்து மேஜிக் ரீல் திரைப்பட விழாவைத் நடத்தி வருகிறார். இப்போது நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டன.
இதில் சிறந்த குறும்படமாக, விக்னேஷ் பரமசிவம் இயக்கிய ‘அன்பிற்கு எண் ஒன்றை அழுத்தவும்’ தேர்வானது. லைஃப் ஆஃப் பழம் என்ற படத்தை இயக்கிய னி சிறந்த இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.