
மிர்பூர்: வங்கதேசம் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்க்கார் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் சைஃப் ஹசன் 72 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர்.

