மும்பை: பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) சத்யா நாதெள்ளா கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
இவருக்கு கடந்த 2023-24 நிதியாண்டுக்கு ரூ.694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2024-25-ல் ரூ.850 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இது உலகளவில் அந்த நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் உதவியுள்ளது. சத்யாவின் ஊதியம் கணிசமான அளவுக்கு அதிகரித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.