“தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. ஆகவே, தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்க முடியாது” என்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொழி குறித்த விவாதம் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. “மும்மொழிக் கொள்கை என்பது rule of law” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கூற்றை, “மும்மொழிக் கொள்கையைச் சட்ட விதிமுறைகள் என்கிறார் மத்திய அமைச்சர்” எனப் பல தமிழ் ஊடகங்கள் மொழிபெயர்த்தன: Rule of Law என்பது சட்டமும் விதிமுறையும் மட்டுமல்ல, அது சட்டத்தின் மாட்சிமையைக் குறிக்கும். மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், நமது நாட்டில் சட்டத்தின் மாட்சிமையைப் பேண முடியும் என்பது அமைச்சரின் கருத்தாக இருக்கலாம்.