தனது அடுத்த படமாக ‘திரெளபதி’ 2-ம் பாகத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் மோகன்.ஜி.
‘திரெளபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய கூட்டணி மோகன் ஜி – ரிச்சர்ட் ரிஷி. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ‘திரெளபதி 2’-ல் பணிபுரியவுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி மற்றும் ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கவுள்ளது.