மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் 'எல் 2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.
மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜெரோம் பிளின் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.