புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கனின் சுழற்பந்து வீச்சை கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்றபோது டெவின் இம்லாக்கால் ஸ்டெம்பிங்க் செய்யப்பட்டார்.