பொள்ளாச்சி: தமிழக – கேரள எல்லையில் வால்பாறை நகரம் அமைந்துள்ளது. தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இந்த நகரம் உள்ளதால், மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழைக்கு பின்னர், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்களின் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.