முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை என வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வன விலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை, மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர்.
இதுதவிர, கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது.