ஹைதராபாத்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி)யில் கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சுரங்கத்தின் 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கம் இடிந்துள்ளது.