நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுபோட்டியில் முதல் நிலை வீரரான ஜன்னிக் சின்னர், தரவரிசையில் 27-ம் நிலையில் இருக்கும் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 5-7, 6-4, 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.