நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 32-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோடார்டெரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.