அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது. இது எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.