புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி. மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனரான இவர், 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர்.
அப்போது அரசு கொறடாவாக 5 ஆண்டு காலம் இருந்தவர், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் நின்று தோற்றுப் போனார். 2021-ல் என்.ஆர்.காங்கிரசை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற நேரு, ரங்கசாமி முதல்வராக வருவதற்கு ஆதரவளித்தார். ஆனால், முதல்வர் ரங்கசாமியை ஆதரித்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சுறுக் சுறுக் என்று சுட்டிக்காட்டினார். தடாலடி போராட்டங்களிலும் குதித்தார். இன்றளவும் அது தொடர்கிறது.