லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் ஆமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தற்போது முடிந்துவிட்டன. மீதமிருக்கும் சில காட்சிகளையும் முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது.