சென்னை: ரவுடி நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக் கோரி அவரது மனைவி 2 நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தார். ஒரே கோரிக்கையுடன் 2 நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post ரவுடி நாகேந்திரன் மனு: ரூ.50,000 அபாரதம் விதித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.