வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.