புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய விமானப் படைக்கு ரஷ்யாவிடமிருந்து 5 எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இதுவரை 3 ஏவுகணை தொகுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, உக்ரைன் போர் காரணமாக மற்ற 2 ஏவுகணைகளை விநியோகம் செய்வது தாமதமாகி வருகிறது. தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை இந்தியாவில் சுதர்சன சக்ரம் என அழைக்கப்படுகிறது.