புதுடெல்லி: “ராகுல் காந்திக்கு வழிகாட்ட 20 ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை” என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் செய்தியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு மணி சங்கர் ஐயர் பதிலளித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பில் அவர் தோல்வி அடைந்தது பற்றி குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேர்காணல் தொடங்குவதற்கு முன்பாக, "நான் உங்களிடம் என்ன சொன்னாலும், அது பாஜகவால் திரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியும். அவர்களால் அதைச் செய்ய முடியும்.