கொழும்பு: இலங்கையில், கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதல்முறையாக வடக்கு மாகாணத்தில் நேற்று சுற்றுபயணம் செய்தார். யாழ்ப்பாணத்தில் அவர் பேசும்போது,‘‘ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது 3,500 ஏக்கர் நிலங்களை ராணுவம் கைப்பற்றியது.
யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள பலாலி ராணுவ தளத்தின் உயர் மட்ட பாதுகாப்புக்காக அதிகமான நிலங்கள் எடுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நிலங்களின் உரிமையாளர்கள் சிலரின் நிலம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீதம் உள்ள உரிமையாளர்களுக்கு அவர்களுடைய நிலத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post ராணுவம் கைப்பற்றிய நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.