நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை (ஜன.31) திரையரங்குகளில் ரீரிலிஸ் செய்யப்படுகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021-ல் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியிருந்தார். தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு சிம்பு சுவைத்த வெற்றிப் படம் இது. ‘டைம் லூப்’ ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பார்த்தது. குறிப்பாக, நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.