புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ருவாண்டா நாட்டுக்கு தப்பியோடிய சல்மான் ரெஹ்மான் கான் என்ற பயங்கரவாதியை இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட (2018-2022) சல்மான் ரெஹ்மான் கான், சிறையில் இருந்து வெளியே வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்த சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை வழங்க உதவினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.