விருத்தாசலம்: சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன். தமிழ் சமுதாயத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ 7-வது மண்டல மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு. தமிழகம் முழுவதிலும் 132 அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.