உலகளவில் ‘டிராகன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. இப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் 1 மில்லியன் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அமெரிக்காவில் 1 மில்லியனை கடந்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.