ஈரோடு: “ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக 2-ம் நாளாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “தமிழ் தேசிய மக்கள் பல நெடுங்காலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தமிழக மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை.