சென்னை: ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு அரசு ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் என்பது அதீத வளர்ச்சியை தினந்தோறும் கண்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.2000-க்கு மேலான ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இது ஏற்கப்பட்டால் 18 சதவீதம் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நடைமுறைக்கு வந்தால் யுபிஐ பரிவர்த்தனையில் பெரிய மாற்றம் நிகழும் என சொல்லப்பட்டது.