அமராவதி: தலைநகர் அமராவதியில் உள்ள பேரவையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி அரசு சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் வி. கேஷவ் ரூ.3.22 லட்சம் கோடியில் இந்த 2025-26ம் வருவாய் ஆண்டுக்காக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில், விவசாய நல திட்டங்களுக்காக ரூ.44 லட்சம் கோடியும், அன்ன தாதா சுக்கீ பவ திட்டத்துக்கா ரூ. 6,300 கோடியும், போலவரம் அணைக்கட்டும் திட்டத்துக்காக ரூ.6,705 கோடியும், அடிப்படை வளர்ச்சி நிதிக்கு ரூ.1,228 கோடியும், பள்ளி கல்வி திட்டங்களுக்கு ரூ.31,805 கோடியும், உயர்கல்வி திட்டங்களுக்கு ரூ.2,506 கோடியும், எஸ்சி பிரிவு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.20,281 கோடியும், எஸ்டி பிரிவினரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.8,159 கோடியும், பிசி பிரிவினரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.47,456 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.