புதுடெல்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த உபவன் பவன் ஜெயின் என்பவர் ரியல் எஸ்டேட் முகவராக உள்ளார். இவர், ரூ.3.66 கோடி மோசடி செய்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பி சென்றார். இதையடுத்து குஜராத் காவல்துறையின் வேண்டுகோளின்படி கடந்த 2023ம் ஆண்ல் உபவன் பவன் ஜெயினுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் இன்டர்போல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் உதவியுடன் உபவன் பவன் ஜெயின் கடந்த 20ம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த தகவலை சிபிஐ தெரிவித்துள்ளது.
The post ரூ. 3.66 கோடி மோசடியில் தப்பி ஓட்டம்; ரியல் எஸ்டேட் அதிபரை நாடு கடத்தியது யுஏஇ appeared first on Dinakaran.