பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் மும்பை ஓஷிவாரா பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ரூ.31 கோடிக்கு வீடு வாங்கியிருந்தார். ஆறு கார் பார்க்கிங் வசதி கொண்ட அந்த பிரம்மாண்ட வீட்டை, நடிகை கீர்த்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சம் வாடகைக்கு அமிதாப்பச்சன் கொடுத்திருந்தார்.
இப்போது அந்த வீட்டை ரூ.83 கோடிக்கு அவர் விற்றுள்ளார். இதற்கான முத்திரைத் தாள் கட்டணம் மட்டும் ரூ.4.98 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.