சென்னை: “தந்தை கருணாநிதி அங்கீகரித்ததை மகன் ஸ்டாலின் நிராகரிக்கிறார்” என்று ரூபாய் குறியீடு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தின் 2025-2026-ம் ஆண்டுகான பட்ஜெட் இலச்சினையில், ரூபாய் அடையாள குறியீடு மாற்றப்பட்டுள்ளது. தமிழரான உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட குறியீடு, முழு பாரதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூபாய் தாள் மற்றும் நாணயத்தில் இணைக்கப்பட்டது. உதயகுமார் முன்னாள் திமுக எம்எல்ஏ-வின் மகன்’ என்று குறிப்பிட்டு, லோகோவில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதை முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார்.