‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், “இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன்.
என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது. அதே நேரம் இதில் நிறைய ஆக்‌ஷனும் உண்டு. ஆனா இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை ஆராய்ந்திருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன்.