‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு சூர்யா மகிழ்ச்சி அடைந்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெருசு’. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ‘ரெட்ரோ’ படம் குறித்த கேள்விக்கு கார்த்திக் சுப்பராஜ், ”ரொம்ப நன்றாக வந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ’ரெட்ரோ’ டீசர் வெளியானவுடன் நிறைய பேர் ‘தளபதி’ காட்சியமைப்பு மாதிரி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது எனக்குமே ரொம்ப பிடித்திருந்தது.