மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.