பாகிஸ்தான் நாட்டில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது லண்டனிலும் எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் சமாளிக்கத் தவறியதாக எதிர்க்கட்சிகள் சாடி வந்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி இம்ரான் கான் அரசில் இடம்பெற்றிருந்த பல்வேறு கூட்டணிக் கட்சிகளும் கூட அவருக்கு எதிராகத் திரும்பி விட்டன. கூடவே பாக். ராணுவமும் அவருக்கு எதிராக உள்ளதாகக் கூறப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் – பாகிஸ்தான் மக்கள் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்தச் சூழலில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பெரும்பாலான உறுப்பினர்கள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக இருந்ததால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறும் என்றும் இம்ரான் கான் அரசு கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதைப் பொறுப்பு சபாநாயகர் ரத்து செய்தார். நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல் இந்நிலையில், லண்டனில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர் நவாஸ் ஷெரீபை தாக்கியதாகப் பாகிஸ்தானின் ஃபேக்ட் ஃபோகஸ் செய்தியாளர் அஹ்மத் நூரானி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் நவாஸ் ஷெரீப் காயமடையவில்லை என்ற போதிலும், அவரது காவலர் இதில் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நவாஸ் ஷெரீப் மீதான இந்தத் தாக்குதல் நேற்றைய தினம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வீடியோ இது தொடர்பன வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம், வன்முறையில் ஈடுபடும் ஆளும் கட்சியினரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், இம்ரான் கான் மீதும் வன்முறை தூண்டுதல் மற்றும் தேசத் துரோகம் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாக்.-இல் நடப்பது என்ன இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 199 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதேபோல இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக 140க்கும் குறைவான உறுப்பினர்களே ஆதரவாக இருந்தனர். பாக். நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேறக் குறைந்தது 177 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் அவர் அரசு கவிழ்வது உறுதி என்றே எதிர்பார்க்கப்பட்டது.