லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.