மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு லைவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் பேசிய பாபில் கான, “ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல், ஆதர்ஷ் கவுரவ், அர்ஜித் சிங் போன்றோரை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறது. பாலிவுட் மிகவும் மோசமானது” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.