தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908” என்று தமிழில் 2022ம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024ம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த எழுச்சிக்கான நினைவு சின்னத்தை அரசு அமைக்க வேண்டும் என்று வேங்கடாசலபதி கோரிக்கை விடுத்துள்ளார்.