வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள செட்டியப்பனூர் மற்றும் காதர் பேட்டை, ஜீவா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட ஈத்கா மைதானங்களிலும், 60க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
பின்னர் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து கருப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகை appeared first on Dinakaran.