வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. “பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் காலிதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்,” என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

