டாக்கா: வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வங்கதேச போர் விமானம் நேற்று மோதி தீபிடித்ததில், 20 பேர் பலியாகினர். 170 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று உயிரிழந்ததை யடுத்து, பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 25 பேர் குழந்தைகள் என்று வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் சிறப்பு ஆலோசகர் சைதுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக நேற்று வங்கதேசம் முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான விபத்து நடந்த இடத்தை பார்க்க இடைக்கால அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை ராணுவத்தினர் மீட்டனர்.
The post வங்கதேச விமான விபத்து பலி எண்ணிக்கை 31 ஆனது: அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.