டெல்லியில் போலீஸார் நடத்திய சோதனையில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 170 பேர் சிக்கினர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
டெல்லியின் பல பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸார், வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீஸார் மற்றும் வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு டெல்லியில் பல இடங்களில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியது. இதில் முறையான ஆவணங்கள் இன்றி சுமார் 175 பேர் தலைநகரில் வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.