டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் அந்நாட்டை நிர்மாணித்த தலைவருமான முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீட்டை மாணவர்கள் சூறையாடி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டு மக்களுக்காக நேற்று இரவு காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது தலைநகர் டாக்காவில் உள்ள முஜிபுர் ரஹ்மானின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் தீயிட்டு கொளுத்தினர்.
வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்பட்டு வந்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீட்டை மாணவர்கள் தீக்கிரையாக்கிய சம்பவம் அவரது மகளும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவை கலக்கம் அடைய வைத்துள்ளது. காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஹசீனா, தனது தந்தை முஜிபுர் ரஹ்மானின் நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட வீடு கொளுத்தப்பட்டது குறித்து வேதனை தெரிவித்தார். பாகிஸ்தானிடம் இருந்து 1971ம் ஆண்டு வங்கதேசம் பிரிந்த போது, பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் தங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டது என்றும் ஆனால் யாரும் நெருப்பு வைக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
The post வங்கதேசத்தை நிர்மாணித்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீடு தீக்கிரை : தந்தையின் வீடு கொளுத்தப்பட்டதால் ஷேக் ஹசீனா வேதனை!! appeared first on Dinakaran.