சென்னை: முதலீட்டுக்கான அனைத்து வசதிகளையும் வளங்களையும் வடகிழக்கு மாநிலங்கள் நிறைவாக கொண்டுள்ளதால், தமிழக முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அங்கு முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டுமென்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு சென்னையில் இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்தியாவின் அஷ்டலட்சுமி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள், நாட்டில் முதலீட்டுக்கான முன்னணி மையமாகத் திகழ்கின்றன.