சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றான வடகொரியாவில் 70 – 90 டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் டார்பிடோக்கள், கண்ணிவெடிகளை மட்டுமே ஏவும் திறன் கொண்டவை கடந்த 2021ம் ஆண்டு வடகொரியாவில் நடந்த மிகப்பெரிய மாநாடு ஒன்றில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்காவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது. இது 6,000 டன் முதல் 7,000 டன் வரை எடை கொண்டதாக உள்ளது வடகொரியாவின் இந்த நடவடிக்கை தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தும் செயல் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
The post வடகொரியாவில் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல் அறிமுகம்: தென்கொரியா, அமெரிக்கா அச்சம் appeared first on Dinakaran.