சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1,300 கோடியிலான 80 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை தங்கசாலையில் ரூ.2,096.77 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 87 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது பல்வேறு துறைகளின் சார்பில் பணிகள் விரிவடைந்து தற்போது ரூ.5,779.66 கோடி மதிப்பீட்டில் 225 திட்டங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முக்கிய துறைகளின் சார்பில் சுமார் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் 80 புதிய திட்டங்களை நவ.30-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார்.