ஓசூர்: ஆண்டு முழுவதும் சந்தையில் நல்ல விலை கிடைத்த நிலையில், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் உருளைக் கிழங்கை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், பீ்ட்ரூட், நூல்கோல், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியி்ல் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஓசூர் பத்தளப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.