மும்பை: ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: பருவ மழைப் பொழிவு மற்றும் நெருங்கி வரும் பண்டிகை காலம் பொருளாதாரத்துக்கு சாதகமாக இருந்தாலும் உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலை உள்ளது. நடுத்தர கால அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைகள் பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.