சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசியதாவது: மாநில அரசின் வரிவருவாயில் வணிகவரித் துறை மூலமாக 71.6 சதவீதமும், பதிவுத்துறை மூலமாக 15.4 சதவீதமும் பெறப்படுகிறது.