சென்னை: தமிழக வனத்துறையில் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவ பணியாளர் பணியிடங்கள் உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக நவீன பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க எண்ணற்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வனவிலங்குகள் பராமரிப்பிற்கென 8 உதவி கால்நடை மருத்துவர், 6 கால்நடை உதவியாளர் மற்றும் 9 கால்நடை உதவியாளர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 23 கால்நடை மருத்துவ பணியிடங்களை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
The post வனவிலங்கு பராமரிப்பு, பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவ பணியாளர் நியமனம்: முதல்வர் ஒப்புதல் appeared first on Dinakaran.