ஆரா: வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுன் ஜீப்பை இயக்கிய டிரைவர், அதில் பயணித்த 15 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங். அந்தப் பகுதியில் வாடகை ஜீப் வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று ஜாவூன் கிராமத்திலிருந்து 15 பயணிகளை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.